2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்தாண்டுக்கான பாதீடு கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மறுநாள் 18 ஆம் திகதி முதல் இன்று மாலைவரை 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்ற நிலையிலேயே மாலை 5.45 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பட்ஜட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 99 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேறியது.