2022 – ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு!

ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05/2021இன் பிரகாரம் ஓய்வூதிய திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுபற்றிய விவர சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எ.ஜகத். டி.டயஸ் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டிற்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவுகள் பின்வரும் திகதிகளில் வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

ஜனவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 10ஆம் திகதி வியாழக்கிழமை, மார்ச் 10ஆம் திகதி வியாழக்கிழமை, ஏப்ரல் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மே 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜுன் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஜுலை 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஓகஸ்ட் 10ஆம் திகதி புதன்கிழமை, செப்டம்பர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 06ஆம் திகதி வியாழக்கிழமை, நவம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை, டிசம்பர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை.

Related Articles

Latest Articles