2022-ல் சிவகார்த்திகேயன் தான் டாப்

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த லைன் அப்-யை தான் நாம் பார்க்கவுள்ளோம். இவை அனைத்தும் அடுத்த வருடம் வெளியாகவோ அல்லது ஆரம்பிக்கவோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டான் : 

டாக்டர் படத்திற்கு SK நடிப்பில் அடுத்த வெளியாக இருப்பது டான் திரைப்படம் , அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் காணப்படுகிறது. இப்படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அயலான் : 

இன்று நேற்று நாளை படத்திற்கு பின் இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் அயலான். Alien-யை முக்கிய கதாபாத்திரமாக காட்டப்படவுள்ள அயலான் படத்தை பெரிய பொருட்செலவில் எடுத்துள்ளனர்.

கடன் பிரச்சனைகள் காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் படத்திற்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பிரச்சனைகள் முடிக்கப்பட்டு படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பாதை :  

சிவகார்த்திகேயன் முதல்முறையாக இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கி வருகிறார். இப்பொது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படமும் 2022 வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் :

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளார். இப்படமும் 2022 ஆம் ஆண்டு தொடங்கலாம் என கூறப்படுகிறது.

தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் :  

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி தொடங்கும் என்றும் அதன் அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Video thumbnail
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்ட ரஞ்சன்
01:37
Video thumbnail
கேஸ் விபத்துக்கள் குறித்து மௌனம் காக்கும் அரசாங்கம்
01:38
Video thumbnail
“எதிர்வரும் நாட்களில் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில்”
01:41
Video thumbnail
“தனது இரு குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை கைது”
01:42
Video thumbnail
உலக சாதனையுடன் அசத்தும் அட்டன், கொட்டகலை சிறுவன்
04:02
Video thumbnail
அதிவேகமும், அவசரமும் உயிரைப் பறிக்கும்!
01:11
Video thumbnail
அடிப்படை வசதிகளுக்காக அல்லாடும் பிள்ளைகளும், ஆசிரியர்களும்!
04:21
Video thumbnail
பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்
03:11
Video thumbnail
“எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிக்கலாம்”
01:36
Video thumbnail
தற்போதைய பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்பல்ல - வஜிர அபேவர்தன
00:32

Related Articles

Latest Articles