அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை 65 வயதுவரை நீடிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது.
10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (இரண்டு தடவைகள்) பதவி வகித்தால் மட்டுமே இனி ஓய்வூதியம். இதுவரை இந்த கால எல்லை 5 வருடங்களாக இருந்தது.
கொரோனா பெருந்தொற்றால் அரசுக்கு 500 பில்லியனுக்கும் அதிகம் இழப்பு.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு வந்த நிதி அமைச்சருக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் மேசைகளில் கைதட்டி பெரும் வரவேற்பளித்தனர். ‘ஜயவேவா, ஜயவேவா என கோஷமும் எழுப்பினர்.
தற்போது பட்ஜட் உரை இடம்பெற்றுவருகின்றது.
……….
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பாதீட்டுக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியது.
இலங்கையின் 76 ஆவது பட்ஜட்டாக இது அமைந்துள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் கன்னி பாதீடு.