2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளரின் தலைமையில் அந்தந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலான ஒன்றாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விசேட தேவையுடையவர்கள், முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோய் மானியம், சமுர்த்தி, மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 5.4 பில்லியன் ரூபாவும், விசேட தேவையுடையவர்கள், முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் 1.8 பில்லியன் ரூபாவும், சமுர்த்தி கொடுப்பனவு கிடைத்து அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமல் மேன்முறையீடு செய்துள்ளவர்களுக்கு 1.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles