2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரே வேட்பாளராக களமிறங்க வேண்டும் – என்று அக்கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
” 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கமாட்டோம். வாடகை வேட்பாளர்களை களமிறக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்தான் வேட்பாளராக போட்டியிடவேண்டும். அது தொடர்பான அறிவித்தலை முன்கூட்டியே வெளியிட்டுள்ளமை வரவேற்கக்கூடிய விடயமாகும். அப்போதுதான் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.” – எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக்கொண்டு கூட்டணியாக பயணிப்பதற்கு நாம் தயார். ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் ஐ.தே.கவில் இருந்தால் அது சாத்தியப்படாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
