2024 பாதீடு – சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க எதிரணி வியூகம்

வரவு – செலவுத் திட்டத்தின் சில அமைச்சுகள்மீதான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் என தெரியவருகின்றது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி 2ஆவம் வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமாகும். 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

3ஆம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகும். டிசம்பர் 13 ஆம் திகதி பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பாதீட்டு விவாதத்தில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் தனித்தனியாக விவாதம் நடத்தப்படும்.

இதன்போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அமைச்சுகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் எதிரணி வாக்கெடுப்பைகோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்சக்தி அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட மேலும் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க முயற்சி எடுக்கப்படுகின்றது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு சாதாரண பெரும்பான்மை (113) போதும் என்ற நிலையில், அதற்கான பலம் அரச தரப்பில் உள்ள நிலையில், இப்படியானதொரு முயற்சியில் ஈடுபடுவது ஏற்புடைய நடவடிக்கையா என்ற கேள்வியும் எதிரணி தரப்பில் எழுந்துள்ளது.

ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இதுவும் ஒரு நகர்வாக இருக்கும் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, பாதீட்டு விவாத காலப்பகுதியில் ஆளுங்கட்சியினரை கொழும்பிலேயே இருப்பதற்கான ஆலோசனை ஆளுந்தரப்பில் இருந்து விடுக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles