2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் நாடக விழாவில், மலையகத்தைச் சேர்ந்த ‘சங்கு கலைக்கழகம்’ தயாரித்த “தப்பினோம் பிழைத்தோம்” நாடகம் திறந்த பிரிவில் போட்டியிட்டு 11 விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
பிரபல நாடகக் கலைஞர் தியாகராஜா சிவநேசனின் நெறியாள்கையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட நாடகம், அரங்க மேடையில் பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன், நடுவர்களின் பாராட்டையும் பெற்று இந்தத் தேசிய அளவிலான அங்கீகாரத்தைச் சுவீகரித்துள்ளது.
மலையக மண்ணின் கலைப் திறமையையும், அங்குள்ள இளம் கலைஞர்களின் ஆற்றலையும் தேசிய தளத்தில் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த வெற்றி, மலையக கலைத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஒன்பது விருதுகளை வென்று சாதனை படைத்த சங்கு கலைக்கழக நாடகக் குழுவினர், நெறியாளர் தியாகராஜா சிவநேசன் மற்றும் இதில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
