களுவாஞ்சிக்குடியில் கோர விபத்து: ஐவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்துக்கு அருகில் வைத்து, கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிவேகமாகப் பயணித்த இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இருவருமாக மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் களுவாஞ்சிகுடி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியில் குடைசாய்ந்து பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர் ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles