2025 ஆம் ஆண்டு பாதீடு (நேரலை)

மலையக தமிழர்களுக்காக….
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா..
மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா….
மலையக தமிழ் மக்களின் பாடசாலைகள் (நவீன வகுப்பறைகள்) 866 மில்லியன் ரூபா….

யாழ். நூலகத்தை எரித்ததால் அம்மக்களுக்கு ஏற்பட்ட வலி இன்னும் நீங்கவில்லை. தேர்தலுக்காக நூலகத்தை எரிப்பது எந்த வகையில் நியாயம்? யாழ். நூலகத்துக்கு தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உரிய உதவிகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்திற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2025 ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு….

புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கையின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த வலையமைப்பு விரிவாக்கப்படும்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எங்களின் முக்கிய பகுதியாகும். பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம்.

பொருள் மற்றும் சேவை நியாயமான விலைக்கு தடையின்றி விநியோகிக்கப்படும்.

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.

மக்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 19 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு.

2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை முறையாக செலுத்துவோம்.

ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

Related Articles

Latest Articles