அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான வாக்கெடுப்பு இன்றிரவு (22) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.30 மணிவரை தொடர்ந்தது.இன்றைய தினமும் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை விவாதம் தொடரவுள்ளது. அதன்பின்னர் குழுநிலை விவாதத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படும்.
பல திருத்தங்கள் இருப்பதால் ’20’ நிறைவேறுவதற்கு சிலவேளை நள்ளிரவு நெருங்கலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை ’20’ ஐ நிறைவேற்றிக்கொள்வதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெருவதில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இன்றைய தினமும் முக்கிய சந்திப்புகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ’20’ இற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், அவரின் கட்சியான சுதந்திரக்கட்சி ஆதரவளிக்கவுள்ளது. மைத்திரி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்.
