21குறித்து மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி நாளை பேச்சு!

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளையும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாளை மாலை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதை தடுக்கும் ஏற்பாட்டை பஸிலின் சகாக்கள் எதிர்க்கின்றனர்.

இந்நிலையிலேயே ஆளுங்கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles