’21 ஆம் திகதி முதல் கட்டங்கட்டமாக நாட்டை திறக்க முடியும்’

முடக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் கட்டங்கட்டமாக திறக்ககூடியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

” நாட்டில் 4 வாரங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருப்பதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதத்தில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டை படிமுறை ரீதியில் திறக்ககூடிய சூழ்நிலை உருவாகும். தடுப்பூசி திட்டத்தை முன்னெடுப்பதுடன், இதர சுகாதார விடயங்களையும் முறையாக பின்பற்ற வேண்டும்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் தற்போதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அபாய வலயத்தில் இருந்து மீளவில்லை என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Paid Ad
Previous articleநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!
Next articleபயன்படுத்தப்படாத ‘Data Rollover’ஐ அடுத்த பில் கட்டணத்திற்கு எடுத்துச் சென்று Postpaid வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்கும் Airtel