” பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்துகளை தொடர்பில் கவலையடைகின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (5) தெரிவித்தார்.
21/4 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று வலியுறுத்தினார்.
” முன்னாள் ஜனாதிபதி (மைத்திரிபால சிறிசேன) தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆடை அணிந்துகொண்டா அவர் இவ்வாறான அறிவிப்பை விடுக்கின்றார்? பேரவலமொன்று இடம்பெறவுள்ளது என தெரிந்தும், தமது கடமையை, பொறுப்பை மறந்து வெளிநாடு சென்ற அவர், எப்படி தேர்தலில் போட்டியிட முடியும், கட்சி தலைமைப்பதவியை வகிக்க முடியும்? ” எனவும் ஆயர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அவரின் இந்த அறிவிப்பு தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே ” கவலையடைகின்றேன்” என்ற விடயத்தை மட்டும் மைத்திரி குறிப்பிட்டார்.