21 ஆம் திகதி நிலைப்பாட்டை அறிவிப்பார் ஜனாதிபதி?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி வெளியிடுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று 2 வருடங்கள் நிறைவுபெறும் நாளில் (ஜுலை 21) தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை அவர் வெளியிடுவார் . இது தொடர்பில் கட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கட்சிகூடி உரிய வகையில் – உரிய முடிவை எடுக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles