’22’ ஏமாற்று நடவடிக்கை! சுமந்திரன் காட்டம்!!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது மக்களை முற்று முழுதாக ஏமாற்றும் நடவடிக்கையாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்று உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

” இந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது, மாற்றம் கோரப்பட்டது. அத்தகையதொரு மாற்றத்தின் முதலாவது படியே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் எனக் கூறப்பட்டது. ஆனால் அது பொய்யாகும். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த திருத்தங்கள் இடம்பெறவில்லை. எனவே, மக்கள் போராட்டம் வெடிக்கும். மக்களை ஏமாற்றும் இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

20 மூலம் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் 22 இலும் உள்ளது.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles