ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோ வெற்றிபெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குரிய 7 ஆசனங்களில் ஐந்தை அநுர தரப்பு கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், மொட்டு கட்சிக்கு ஒரு ஆசனமும் அம்பாந்தோட்டையில் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் 7 ஆசனங்களில் ஆறை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்திலும் அநுர தரப்பே வென்றுள்ளது.
இன்று காலைவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 22 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி நான்கு ஆசனங்களையும், மொட்டு கட்சி இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.