240 லீற்றர் பெற்றோலுடன் மடூல்சீமையில் ஒருவர் கைது!

240 லீற்றர் பெற்றோலுடன் 50 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிட்டமாறுவை பகுதியில் வியாபார நிலையமொன்றில், அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்யப்படுகின்றது என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் இருந்து மொத்தமாக 240 லீற்றர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர்,   சோமசிரி நிவச ரடகொம்வன பிட்டமாறுவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் குறித்த சந்தேக நபர் இன்று பதுளை நீதிவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles