25 ரூபாவையே சம்பள உயர்வாக வழங்க முடியும் – கம்பனிகள் திட்டவட்டம்!

தமக்கான அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அடிப்படை சம்பளத்தை 25 ரூபாவால் மட்டுமே அதிகரிக்க முடியும் என பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பான யோசனையை இன்று தொழில் அமைச்சரிடமும் முன்வைத்துள்ளன.

தொழில் அமைச்சருக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அடிப்படைச் சம்பளமாக 725 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 125 ரூபாவும், வரவுக் கொடுப்பனவாக 100 ரூபாவும், விலை சகாயப்படி கொடுப்பனவாக 50 ரூபாவும் உள்ளடங்களாக ஆயிரத்து 8 ரூபாவை வழங்கும் யோசனையை கம்பனிகள் முன்வைத்துள்ளன. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும், குறித்த சந்திப்பில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது நாளாந்த அடிப்படை சம்பளமாக 700 ரூபாவை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles