25 மாவட்டங்களுக்கும் கொரோனா பரவியது – கிளிநொச்சியிலும் தொற்றாளர் இனங்காணப்பட்டார்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 13 அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மர்ரம்கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த நபர் வருகைதந்தவுடன் அவர்
உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதார பரிசோதகரும் விழிப்பாக செயற்பட்டமையால் உடனடியாக குறித்த நபர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர் பணியாற்றிய உணவகஉரிமையாளர் மற்றும் அங்குள்ள கடமையாற்றிய சில பணியாளர்களுக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டமையினையடுத்து இவருக்கும் பிசிஆர் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளங்கள் இனம் காணப்பட்ட
நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இன்றியமாவட்டமாக இருந்த நிலையில் இன்று முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்
காணப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles