உள்ளாட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் 27 பிரதானக் கூட்டங்கள் மொட்டு கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.










