289 பேருடன் மெல்பேர்ணிலிருந்து புறப்பட தயாரான விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு

மெல்பேர்ணிலிருந்து அபுதாபிக்கு பயணிக்க தயாரான விமானத்தில் டயர்கள் வெடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்குரிய காரணம் என்னவென்பது பற்றியே விசேட குழுமூலம் விசாரிக்கப்பட்டுவருகின்றது.

மெல்பேர்ணில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.

விமானத்தில் 289 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தின் 2 டயர்கள் திடீரென வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானிகள் விமானத்தை உடனடியாக நிறுத்தினர். அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த அவசர கால மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

விமானத்தில் டயர்கள் வெடித்ததை கண்டறிந்து விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் உயிர்தப்பினர்.

இச்சம்பவத்தால் விமான சேவை சற்று தாமதமானாலும், விமான சேவை எதுவும் இரத்து செய்யப்படவில்லை.

Related Articles

Latest Articles