2ஆம் கட்ட அமைதி பேச்சு: பாகிஸ்தான் விரைகிறார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் பாகிஸ்தானில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுகள் இடம்பெறவுள்ளன.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தரப்பில் டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் Steve Witkoff மற்றும் ட்ரம்பின் மருமகன் Jared Kushner ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அவர்கள் இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத் செல்கின்றனர்.

ஈரானின் அணுஆயுதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முறையான உடன்படிக்கை எட்டப்படும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் நிபந்தனை விதித்துள்ளார்.

தற்போது ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்து முடக்கம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதல்கள் இந்தச் சந்திப்பின் முக்கியப் பின்னணியாக அமைந்துள்ளன.

பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் அமெரிக்கத் துணைத் தலைவர் நேரில் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஈரானின் தூதுக்குழுவும் இஸ்லாமாபாத் வந்துள்ளது.

Related Articles

Latest Articles