கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் 5 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் இரண்டு பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 3,839 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 720 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
