ஊரடங்கு உத்தரவைமீறிய 52 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொட, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று முன்தினம் ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்நிலையிலேயே ஊரடங்கு உத்தரவைமீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










