3 நாட்கள் போர் நிறுத்தம்: புடின் அறிவிப்பு

உக்ரைனுடன் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.

மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் மே 8 முதல் 10 வரை குறித்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உக்ரைனும் பின்பற்ற வேண்டும் என ரஷ்ய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ரஷ்யா அதற்கான தகுந்த பதிலடியை கொடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் மே 9 வெற்றி தினத்தையொட்டி புடின் இந்த போர்நிறுத்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இதற்கு, பல்வேறு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles