3 மணிநேரம் முகாமிட்டு பேச்சு நடத்தியும் முடிவின்றி முடிந்த கூட்டம்!

மூன்று மணிநேரம் சிறிகொத்தவில் முகாமிட்டு பேச்சு நடத்தியபோதிலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று சிறிகொத்தவில் கூடியது.

தலைமைப்பதவி உட்பட கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கை, தேசிய பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் நியமனம், கரு ஜயசூரியவின் அழைப்பு ஆகியன தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கும் நோக்கிலேயே செயற்குழு கூட்டப்பட்டிருந்தது.

சுமார் 3 மணிநேரம் இவ்விவகாரம் தொடர்பில் அலசி ஆராய்ந்திருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் செம்டம்பர் முதல் வாரத்துக்கு பின்னரே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு மீண்டும் கூடவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சபாநாயகர் பதவியை வகிப்பதற்காக கருஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியதால், தலைமைப்பதவியை ஏற்கவேண்டுமென்றால் முதலில் அவர் கட்சி உறுப்புரிமையை பெறவேண்டும் என ஐ.தே.க.வின் சட்ட விவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles