3 லயன் அறைகள் தீக்கிரை: 12 பேர் நிர்க்கதி!

டி.சந்ரு – செ,திவாகரன்

நுவரெலியா மாவட்டம், பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (16) ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

மூன்று வீடுகளில் வசித்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்தால் வீடுகளில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்குரிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்து மேலதிக நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ் கிராம சேவகரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றார்.

Related Articles

Latest Articles