“3 குடும்பங்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி போராட்டம்”

கொட்டகலை , யதன்சைட் தோட்டத்திலிருந்து மூன்று குடும்பங்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றத்துக்காகவே மேற்படி குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

யதன்சைட் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான ராஜகிரி கார்த்திகேஷன் என்ற இளைஞன் கடந்த 15 ஆம் திகதி கொழும்பு, அத்துருகிரிய பகுதியில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார்.

யதன்சைட் பகுதியில் உள்ள மூவரே அவரை வேலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் எனவும், கொடுக்கல், வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

நமது நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles