30 இராஜாங்க அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பு!

அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க இது முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதியை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அவர்களில் 40 பேரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுள்ளது. எனினும் 30 பேரையே ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் அடுத்த வாரம் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles