சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது.
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் மூன்று (03) டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேல் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபண்ணி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சிலாபம் கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மூன்று (03) டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன.
அப் படகுகளில் 80 உறைகளில் அடைக்கப்பட்டிருந்த மூவாயிரத்து நூற்ற முப்பத்தைந்து சுமார் (3,135) கிலோகிராம் பீடி இலைத் தொகுதியும், டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த பீடி இலைத் தொகுதியை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற வேளையில், கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கை காரணமாக கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன், இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










