32 வயது கணவனை அடித்துக்கொன்ற மனைவி! யாழில் கொடூரம்!!

யாழ்ப்பாணத்தில் கணவனை அடித்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப முரண்பாடு முற்றியமையினால் அது வன்முறையாக மாறியது.

இந்நிலையில் மனைவியின் கடுமையான தாக்குதலுக்குள்ளான 32 வயதான துரைராசா செல்வராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

உடனடியாக சந்தேக நபரான மனைவி கைது செய்யப்பட்டார். திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் ஐந்திற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles