34,000 ஆசிரிய நியமனங்களை வழங்க நடவடிக்கை

பாடசாலையில் மார்ச் மாத புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரியிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களையும் நியமிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் அமைச்சரவை மீளாய்வு குழுவில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் ஒரே தடவையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேற்படி 26,000 ஆசிரியர் நியமனங்களுக்காக தற்போது அரச சேவையிலுள்ள 40 வயதுக்குக் குறைந்த பட்டதாரிகளை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களுக்காக பெப்ரவரி 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம் உட்பட உயர்தர பாடங்களுக்காக இந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அத்துடன் கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறும் 8,000 ஆசிரியர்கள் ஆரம்ப வகுப்பிலிருந்து க.பொ.த சாதாரணதர வகுப்பு வரை கற்பிப்பதற்காக இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

பாடசாலைகளில் 60 வயது பூர்த்தியடைந்த ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேற்படி 26,000 ஆசிரியர்களுள் 4,000 பேர் தேசிய பாடசாலைகளுக்கும் 22,000 ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles