360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா – மூவர் பலி!

ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அத்துடன், வைரஸ் தொற்றால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தினால் சுமார் 10 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடப்பட்ட ரயில் நிலையங்களில் கரையோர மார்க்கத்திலான 5 ரயில் நிலையங்களும் அடங்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles