தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ள நிலையில், அவர் இன்று தனது அலுவலகத்தை சுத்தப்படுத்தினார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஐவர் நியமிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியின் பரிந்துரையின் பிரகாரம் பதவிகள் வழங்கப்படும்.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே தமது அலுவலகங்களைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்று தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் வெளியேறியுள்ளார்.
தேர்தல் செயற்பாடுகளில் 37 வருடகால அனுபம் மஹிந்த தேசப்பிரியவுக்கு இருக்கின்றது.
பதவியில் நீடிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அவர் அதனை ஏற்கவில்லை எனவும், விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.