மாத்தளை மாவட்டம் பிட்டகந்தயை பிறப்பிடமாகவும் பதுளை மாவட்டம் பசறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மல்லிகா துரைராஜா, பெரியாம்பிள்ளை லெட்சுமி அவர்களின் மகளும் திரு.துரைராஜா அவர்களின் மனைவியுமாவார்.
திருமதி மல்லிகா துரைராஜா தனது ஆரம்பக்கல்வியை இறத்தோட்டை இந்துக்கல்லூரியிலும் உயர்க்கல்வியை பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியிலும் மற்றும் உடுவரை மகிந்தா கல்லூரியிலும் கற்றார்.
1988 ம் ஆண்டு அவருக்கு பதுÆநாவிலை தமிழ் வித்தியாலயத்தில் முதல் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பதுளை யூரி தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பதுளை ஸ்ரீ கணேஸா தமிழ் வித்தியாலயத்திலும் பதுளைகலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்திலும் பிரதி அதிபராகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.
இவர் தனது ஆசிரியர் பயிற்சியை எதன்சைட் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பூர்த்தி செய்தவரும் ஆவார். இதன்பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் வாண்மைத்துவக் கல்வியை தொடர்ந்து அவர் கல்விமாணி பட்டதாரியாக உயர்ந்தார்.
இவர் தனது சேவைக்காலத்தில் சக ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் மற்றும் சமூக நலன் விரும்பிகளுடனும் நட்புறவுடன் பழகி வந்தமை குறிப்பிடத்தக்கது.இவரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் தற்போது உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.
புpரதி அதிபர் திருமதி.மல்லிகா துரைராஜா 2026.03.11 ஆம் திகதி தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
இவரது பணி ஓய்வினையொட்டி பாடசாலை சமூகத்தினரால் பிரியாவிடைகளும் வெகுவிமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-நடராஜா மலர்வேந்தன்
நமுனுகுலை நிருபர்
