உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் காலமானார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிஸரோம் பிரதேசத்திலுள்ள நகரில் நான்கு தளங்கள் கொண்ட வீட்டில் சுமார் நானூறு பேர் கொண்ட தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்த Ziona உடல் நலக்குறைவினால் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 76.
மிஸரோம் பிரதேசத்தின் Aizawl என்ற இடத்தை சேர்ந்த Ziona குறிப்பிட்ட மதப்பிரிவை பின்பற்றுபவர். அந்த மதத்தின் பலதார மணம் எனப்படுகின்ற திருமண முறை அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் முதல் திருமணத்திற்குள் காலடி எடுத்துவைத்த Ziona 2004 ஆம் ஆண்டு 25 வயதுப்பெண்ணை மணந்துகொண்டதுடன் நிறுத்திக்கொண்டார். இவருக்கு 33 பேரப்பிள்ளைகளும் ஒரேயொரு பூட்டக்குழுந்தையும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் ஆரம்பத்தில் இரத்த அழுத்தம் – நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்ட Ziona மேலதிக சிகிச்சைக்காக நகர்புற வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்தார். ஜூன் 11 ஆம் திகதிமுதல் சுயநினைவற்ற நிலைக்கு சென்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.
2011 ஆம் ஆண்டு உலகின் அபூர்வ மனிதர்கள் என்ற தொடரில் Ziona இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.