அரச வருமானத்தை 11.3% ஆக அதிகரிப்பது உட்பட நான்கு முக்கிய விடயங்களை இலக்காகக் கொண்டு 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்ள அரச வருமானத்தை 11.3% ஆக உயர்த்தவும், 18.9% ஆக இருக்கும் அரச செலவினத்தை 18.1% ஆகவும், முதன்மை வரவு செலவுத் தொகையை – 4% லிருந்து -1% ஆகவும் குறைக்கவும் மற்றும் – 9.9% இலிருந்து மைனஸ் – 6.8% ஆக வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் குறைக்கும் இலக்குகளை அடைவதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி கோரப்பட்டது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை பூஜ்ஜிய அடிப்படையிலான வரவு செலவுத் திட்ட முறையின் அடிப்படையில் உருவாக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.










