மர்மமான முறையில் தாக்குதல் நடத்தி, பாழடைந்த இடத்தில் 4 வயது சிறுமியை கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (14) முற்பகல் ஹாலிஎல பகுதியில் வைத்து, ஹாலிஎல பொலிஸாரால் குறித்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பெண், சிறுமியின் தாய் என இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13) வத்தேகம, யட்டிராவண வீதியில் உள்ள பாழடைந்த இடத்தில் அச்சிறுமி இருந்தபோது, பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வத்தேகம பொலிஸ் குழுவொன்றினால் சிறுமி மீட்கப்பட்டார்.
முச்சக்கரவண்டியில் வந்து நேற்று முற்பகல் 7 மணியளவில் அச்சிறுமியை அந்த இடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்ததுடன், சிறுமியை அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி தொடர்பான CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமையவே, இச்சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபரும் சந்தேகநபாரியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.










