நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் நான்குவைத்தியர்கள், மூன்று தாதியர்கள், மருந்தாளர்கள் உட்பட 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையின் 7 ஆம் இலக்க விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவில் சேவையாற்றும் சுகாதார அதிகாரிகளுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் நாவலப்பிட்டிய நகரில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டுள்ளார். இதனால் பலருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.










