5 மாதங்களுக்குள் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – 19 பேர் பலி!

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் தென்மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் எனவும், ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, நாட்டில் கொலைச் சம்பவங்களும் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

 

 

Related Articles

Latest Articles