50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – சாரதி படுகாயம்!

நானுஓயா பிரதேசத்திலிருந்து தலவாக்கலை சென்ற முச்சக்கர வண்டி ஒன்று லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெம்லியர் தோட்டமருகில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பாதையை விட்டு 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று 13 காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன் போதும் சாரதி மாத்திரமே சென்றுள்ளார். சாரதி பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கெளசல்யா

Related Articles

Latest Articles