ஆட்சியில் அங்கம் வகித்தபோது 50 ரூபாவைகூட பெற்றுக் கொடுக்கமுடியாத பலவீனத்தை ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தினால் தீர்மானிக்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே இது போட்டா போட்டியான விடயமாகவும் தொழிலாளர்கள் திருப்பியடையாத விடயமாகவும் மாறிவிட்டது.
முழு மலையகத்தையே ஸ்தம்பிக்கச் செய்து தேசிய மட்டத்தில் பல அமைப்புகளினதும் முழுமையான ஆதரவினையும் பெற்று நடைபெற்ற ஹட்டன் சத்தியாகிரகப் போராட்டத்தினாலேயேகூட சம்பள உயர்வை பெறமுடியாமல் போய்விட்டது. தொழிலாளர்களின் ஒற்றுமை, போராட்டங்களுக்கு அப்பால் சம்பள உயர்வை தீர்மானிப்பது கூட்டு ஒப்பந்தம் என்பதனையே இது உணர்த்துகிறது.
இதனைகூட விளங்கிக் கொள்ளமுடியாமல் தொழிலாளர்களை எமாற்றுவதற்காகவும் மாகாணச பையில் வாரிசுகளை உள் வாங்குவதங்காகவும் உண்மையை மூடி மறைத்து பொய்யுரை ஆற்றக்கூடாது.என் தந்தையின் மரணத்திற்கு பின்னர் தலைமையை அபகரித்த ஆர்வத்தினை சம்பளஉயர்வுக்கான எதாவது போராட்டத்திலும் காட்டியிருக்கலாம். பதவி அந்தஸ்து இருக்கும்போது மக்களை மறந்து விட்டுமாகாணசபை தேர்தலுக்காக உணர்ச்சிவசப்படுவது தலைமைக்கு அழகல்ல.
இன்று 1000 ரூபாவை விமர்சித்து குரல் கொடுப்பவர் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார் என்பதனையும் நினைவில் வைத்து ஏமாற்றபவர்கள் வரிசையில் தாமும் இருப்பதை ஏற்றுக்கொண்டுதான் இவ்வாறு கருத்துக்களை தெரிவிக்கவேண்டும்
சம்பள உயர்வு விடயத்திலும் சரி வேறு எல்லா உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களிலும் சரி இவ்வாறான எமாற்றும் அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் நான் மக்களுக்குவிடுக்கும் வேண்டுகோளாகும்.” – என்றும் அனுசா சந்திரசேகரன் குறிப்பிட்டார்.