பொலிஸ் சீருடையில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 52 கிலோ ஹெரோயின் கடத்திய களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையக உப பொலிஸ் பரிசோதகர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியே வாகனத்தில் ஹெரோயின் கடத்திச்சென்றுள்ளார். கடத்தப்பட்ட ஹெரோயினை பெறுவதற்காக காத்திருந்த இருவரும் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுடன் பயணித்த இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
சந்தேகநபர்களை நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே உப பொலிஸ் பரிசோதகர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
