2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 32 ஆயிரத்து 949 மாணவர்களுள் 50 ஆயிரத்து 664 பேர் வெட்டுபுள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். முதல் 5 இடங்களுக்கு தேர்வான மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தகவலை வெளியிட்டார்.










