6 வயது சிறியவரை காதலிக்கும் அந்த பிக் பாஸ் பிரபலம் இவர் தான்

பிக் பாஸ் 7 டைட்டிலை வென்ற கவுஹர் கான் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் கவுஹர் கான். இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் கவுஹர் கான். அந்த சீசனில் தன்னுடன் போட்டியாளராக பங்கேற்ற நடிகர் குஷால் டாண்டனுடன் கவுஹர் கானுக்கு காதல் ஏற்பட்டது.

கவுஹர் கான், குஷால் காதல் நிலைத்து நிற்கவில்லை. இந்நிலையில் கவுஹர் கான் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ஜெயித் தர்பார் என்பவரை தான் கவுஹர் கான் காதலிப்பதாக பேசப்படுகிறது.

தான் கவுஹர் கானுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை ஜெயித் தர்பார் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இது குறித்து கவுஹர் கானுக்கு தெரிந்த ஒருவர் கூறியதாவது,

கவுஹர் மற்றும் ஜெயித் சேர்ந்து அதிக நேரம் செலவிடுகிறார்கள். இருவரின் குடும்பத்தாரும் கூட பழகிவிட்டனர். கவுஹரை விட ஜெயித் 6 வயது சிறியவர் என்றார்.

என்ன கவுஹர் ஜெயிதை காதலிக்கிறீர்களா என்று யாராவது கேட்டால், ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருக் க முடியாதா என்று பதிலுக்கு கேட்கிறார். தற்போது காதல் பற்றி பேச அவர் விரும்பவில்லையாம்.

பிக் பாஸ் 7 வீட்டில் ஏற்பட்ட காதல் தான் நிலைக்கவில்லை இந்த காதலாவது திருமணம் வரை செல்லட்டும் என்று கவுஹர் கானின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குஷால் டாண்டனை பிரிந்துவிட்டாலும் கவுஹர் அவருடன் இன்னும் நட்புடன் பழகி வருகிறார்.

முன்னதாக கவுஹர் கானுக்கும், பிரபல பாலிவுட் இயக்குநரான சஜித் கானுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles