இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 97 பேர் பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர்.
தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் காசா முனையில் இதுவரை 1, 400 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
