நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபுக் கடல், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களுக்கு செல்வதை மீனவர்கள், கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மறுஅறிவித்தல் வரை அதனை தவிர்த்து செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
