மஹர சிறைச்சாலை கலவரத்தால் எட்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல் கிடைத்துள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார். இதன் பின்னணி ஆராயப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கூறினார்.