மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ் லீக் தோட்டப் பகுதியில் சட்டவிரோத போதைப் பொருளுடன் (சீனிகரஞ்சான்) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யும் போது அவரிடம் எண்பத்தி இரண்டு லீற்றர் கசிப்பு போதை பொருள் இருந்த நிலையில் அவை நான்கு கொள்கலன்களில் சேமித்து வைத்திருந்தபோது கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில் மலையகத்தில் பல பெருந்தோட்ட பகுதிகளில் திருட்டுத்தனமான கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதை பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
கசிப்பு உற்பத்தி காரணமாக இளைஞர்கள் பலரும் அதற்கு அடிமையாகி வருவதாகவும் இதனால் பல்வேறு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே சட்டவிரோதமாக பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறும் கசிப்பு உட்பட கள்ளசாராயம் உற்பத்திகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நிருபர் – கௌசல்யா